சிந்தனைக் களம்


தமிழரின் கலை மற்றும் பண்பாடு ஆகியன சார்ந்த உலகளாவிய உயர்நிலைச் சிந்தனைகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் இச்சிந்தனைக்களம் உருவாக்கப் பட்டுள்ளது.


கலை என்ற வகையில் இலக்கியம், இசை, நடனம் முதலிய பல்வேறு அழகியல் வெளிப்பாடுகள் சார் சிந்தனைகளையும், பண்பாடு என்ற வகையிலே அற-ஒழுக்க நியமங்கள், சமய-தத்துவ நம்பிக்கைகள் மற்றும் வாழ்வியல் முறைமைகள் ஆகியன சார் சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்வதற்கான உரையாடற்களமாக இது திகழவுள்ளது.


கலை என்ற வகையிலே முதலில் இசை மற்றும் நடனம் ஆகியன தொடர்பான கலந்துரையாடல்களே இக்களத்தில் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி தொடக்கம் மாதம் தோறும் நிகழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு நிகழ்விலும் முக்கிய உரைகளைத் தொடர்ந்து அவ்வவ்வுரைப்பொருள்கள் சார்ந்த கலந்துரையாடல்கள் நடைபெற்று வந்துள்ளன.


மேலே உள்ள "நிகழ்வுகள்" என்ற இணைப்பினைச் சொடுக்குவதன் (click) மூலம் மேற்படி நிகழ்வுகளின் விபரங்களை நீங்கள் காணலாம்.